கோபி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு
கோபி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு
கடத்தூர்
கோபி அருகே உள்ள கேத்தநாயக்கனூரை சேர்ந்தவர் கவுரிசங்கர். இவருடைய மகன் கவுதம். இவர் அந்தியூர் அருகே மூங்கில்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்தார். அந்தியூர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்து. இதனால் கவுதம் தனது நண்பர்கள் 3 பேருடன் கணேசபுரம் என்ற இடத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றார். நண்பர்கள் 3 பேரும் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். நீச்சல் தெரியாததால் தடுப்பு சுவரில் உட்கார்ந்து கவுதம் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கவுதம் தவறி கிணற்று தண்ணீரில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கவுதமின் உடலை மீட்டனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.