கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி மர்ம சாவு


கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள கங்கலேரியை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 45). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவர் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் புதுப்பட்டி அருகில் மர்மமாக இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story