அரூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
தர்மபுரி
அரூர்:
அரூர் அருகே உள்ள கோணம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் சுரேஷ் அரூர் அருகே உள்ள கீழானூர் கிராமத்தில் ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது இடிந்த சுவரின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாக சுரேஷ் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 6 மாதத்தில் தொழிலாளி சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story