கோபிநாதம்பட்டி அருகே பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு
தர்மபுரி
தர்மபுரி:
கோபிநாதம்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவருடைய மகன் நித்திஷ்குமார் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று நித்திஷ்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-2 மாணவர் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story