தர்மபுரி அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி-யார் அவர்? போலீசார் விசாரணை
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி-பாலக்கோடு ரெயில்வே வழித்தடத்தில் ரெட்டிஅள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று 45 மதிக்கத்தக்க ஆண் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story