பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் தனியார் மில் தொழிலாளி பலி
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சாலா. இந்த தம்பதியின் மகன் மோகன்குமார் (வயது 23). டிப்ளமோ பட்டதாரியான இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் கிழங்கு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மோகன்குமார் பாப்பிரெட்டிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் பாப்பிரெட்டிப்பட்டி-பொம்மிடி சாலையில் பூனையானூர் கிராமம் சிவன் கோவில் அருகே வாகனம் மோதி மோகன்குமார் பலியாகி கிடந்தார். அவருடைய உடலை கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story