தனியார் ஆஸ்பத்திரியில் பெண் சிசு திடீர் சாவு-உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு


தனியார் ஆஸ்பத்திரியில் பெண் சிசு திடீர் சாவு-உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

சேலம் மாவட்டம் வி.கொங்காரப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பவித்ரா. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே அந்த பெண் சிசுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் பெண் சிசுவை தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் அந்த பெண் சிசு நேற்று சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த தர்மபுரி டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story