ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
தர்மபுரி
பென்னாகரம்:
தர்மபுரி காமாட்சி அம்மன் தெருவை சேர்ந்தவர் ஜீவா (வயது 55). தொழிலாளி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் ஜீவா, தனது நண்பருடன் ஒகேனக்கல்லுக்கு சென்றார். அங்கு முதலைப்பண்ணை அருகே அவர்கள் ஆற்றில் குளித்தனர். அப்போது ஜீவா திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை தேடினர். இந்தநிலையில் நேற்று காலை மாமரத்துகடவு பரிசல் துறையில் ஜீவாவின் உடல் கரை ஒதுங்கியது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ஜீவா, காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள்.
Next Story