தர்மபுரி அருகே மருந்தாளுனர் மர்ம சாவு


தர்மபுரி அருகே மருந்தாளுனர் மர்ம சாவு
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள சித்தேஸ்வரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 44). இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காசநோய் பிரிவில் தற்காலிக மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதமாக வீட்டுக்கு வெளியே தூங்கி வந்துள்ளார். இந்தநிலையில் வெங்கடேசன் சம்பவத்தன்று இரவு தூங்க சென்றவர் காலை 8 மணி ஆகியும் எழவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடேசன் மனைவி ஜெயபிரியா புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story