நாகரசம்பட்டி அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


நாகரசம்பட்டி அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி அருகே உள்ள பெரிய தளிஅள்ளியை சேர்ந்தவர் சக்தி (வயது 33). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்தநிலையில் கடந்த 31-ந் தேதி மாலை அவர் தளி அள்ளியில் தென்பெண்ணை ஆற்று கால்வாயில் தவறி விழுந்தார். இதனால் அவர் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story