தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சாவு; கோபி அருகே பரிதாபம்


தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சாவு; கோபி அருகே பரிதாபம்
x

கோபி அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த எலக்ட்ரீசியன் 25 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த எலக்ட்ரீசியன் 25 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

எலக்ட்ரீசியன் சாவு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் தேசிங்கு. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). எலக்ட்ரீசியன். திருமணம் ஆகிவிட்டது. இவர் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் தங்கியிருந்து அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மணிகண்டன் தான் வேலை பார்த்த நிறுவனத்தில் 25 அடி உயரத்தில் உள்ள சிலாப் பகுதியில் ஏறி நின்று எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் இடறி கீழே விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் இதுபற்றிய தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் கட்சியினர் கோபி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், இறந்த மணிகண்டனுக்கு போதிய பாதுகாப்பை தனியார் நிறுவனம் வழங்கவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Related Tags :
Next Story