சூளகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி
கிருஷ்ணகிரி
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள அலகுபாவி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தாபா ஓட்டல் அருகே ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர், லாரியின் அடியில் படுத்து தூங்கியதும், இதை கவனிக்காமல் டிரைவர் லாரியை இயக்கியபோது, சக்கரத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது. ஆனால் இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story