ஈரோட்டில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் பாய்ந்தது
ஈரோடு மூலப்பாளையம் சமயபுரம் மாரியம்மன் ேகாவில் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் ஜெகதீஷ் (வயது 26). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பூமாதேவி (23).
கடந்த ஒரு வாரமாக ஈரோடு அக்ரஹாரம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெகதீஷ் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மின்சார ஒயரை அவர் மிதித்ததாக தெரிகிறது. இதில் ஜெகதீஷ் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கினார்.
சாவு
உயிருக்கு போராடி கொண்டு இருந்த ஜெகதீசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஜெகதீஷ் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெகதீஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.