நாமக்கல் பஸ்நிலையத்தில் முதியவர் திடீர் சாவு-போலீசார் விசாரணை


நாமக்கல் பஸ்நிலையத்தில் முதியவர் திடீர் சாவு-போலீசார் விசாரணை
x
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மூச்சு திணறலால் அவதிப்பட்டு கொண்டு இருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் திடீரென இறந்து விட்டார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் ராஜூ என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story