கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பள்ளிக்கூட மாணவன்

ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி சங்கீதா. இவர்கள் ஊர், ஊராக சென்று வாத்து மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்களுடைய மகன் தங்கவடிவேல் (வயது 10). இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். வருகிற கல்வி ஆண்டில் 6-ம் வகுப்புக்கு செல்ல இருந்தான்.

தற்போது பள்ளிக்கூடத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தங்கவடிவேல் பெற்றோருக்கு உதவியாக வாத்து மேய்த்து வந்தான். மேலும் வாத்து மேய்ப்பதற்காக பெற்றோர், உறவினர்களுடன் கோபி அருகே உள்ள கருங்கரடு பகுதிக்கு சென்று அவன் தங்கியிருந்தார்.

வாய்க்காலில் மூழ்கினான்

இந்த நிலையில் நேற்று காலை பழனிசாமியும், சங்கீதாவும் ஒரு இடத்தில் நின்று வாத்து மேய்த்து ெகாண்டிருந்தனர். அப்போது தங்கவடிவேல் உடன் வந்த சிறுவர்களுடன் சேர்ந்து அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வாய்க்காலில் ஓடும் தண்ணீரை பார்த்ததும் அனைவருக்கும் அதில் இறங்கி குளிக்க வேண்டு்ம் என்று ஆசை ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தங்கவடிவேல் உள்ளிட்ட சிறுவர்கள் வாய்க்காலில் இறங்கி ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தங்கவடிவேல் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கினான்.. இதை பார்த்தவுடன் வந்த சிறுவர்கள் அதிா்ச்சி அடைந்தனர். உடனே அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பிணமாக மீட்பு

பின்னர் இதுபற்றி தங்கவடிவேலின் பெற்றோரிடம் கூறினர். அவர்கள் கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வாய்க்காலில் இறங்கி தங்கவடிவேலை தேடிபார்த்தனர்.

அப்போது அவன் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மதகில் பிணமாக மீட்கப்பட்டான். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தங்கவடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த தங்கவடிவேலின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story