கிணற்றில் பிணமாக மிதந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்


கிணற்றில் பிணமாக மிதந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே உள்ள தகரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி இந்திராகாந்தி (வயது 52). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் காமராஜ் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடியும் எங்கும் காணவில்லை.

இதுகுறித்து காமராஜ் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் இந்திராகாந்தி பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story