கிரிவலப்பாதையில் ஆதரவற்ற முதியவர் பிணம்


கிரிவலப்பாதையில் ஆதரவற்ற முதியவர் பிணம்
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆதரவற்ற முதியவர் இறந்து கிடந்தார்.

திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது.

இங்கு மலையை சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமானோர் கிரிவலம் செல்கின்றனர்.

கிரிவலப்பாதையில் ஆதரவற்ற முதியவர்கள், சாதுக்கள் பலர் தங்கி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கிரிவலப்பாதையில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகில் சாலையோரம் 10 ஆண்டுகளுக்கு மேலான வசித்து வந்த 75 வயது மதிக்கத்தக்க ஆதிரவற்ற முதியவர் உயிரிழந்தார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் 108-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.

அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உயிரிழந்த முதியவரின் உடலை நல்லடக்க செல்ல யாரும் இல்லாததால் சமூக ஆர்வலர்கள் மூலம் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து சமூக ஆர்வலர் மணிமாறன் போலீசாரின் அனுமதியுடன் முதியவரின் உடல் எமலிங்கம் சன்னதி அருகில் அடக்கம் செய்தார்.

அப்போது சாதுக்கள் அவருடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story