முல்லைப்பெரியாற்றில் முதியவர் பிணம்


முல்லைப்பெரியாற்றில் முதியவர் பிணம்
x
தினத்தந்தி 18 Jan 2023 7:00 PM GMT (Updated: 18 Jan 2023 7:01 PM GMT)

தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் முதியவர் ஒருவர் பிணமாக மிதந்தார்.

தேனி

தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றில் ஆண் பிணம் கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு யானைக்கல் என்ற பகுதியில் முல்லைப்பெரியாற்றில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக மிதந்தார். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story