இறந்தவர்கள் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்லும் மக்கள்


இறந்தவர்கள் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்லும் மக்கள்
x

திருச்சிற்றம்பலம் அருகே இறந்தவர்கள் உடலை வாய்க்காலில் இறங்கி மக்கள் எடுத்து செல்கிறார்கள். எனவே வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்;

திருச்சிற்றம்பலம் அருகே இறந்தவர்கள் உடலை வாய்க்காலில் இறங்கி மக்கள் எடுத்து செல்கிறார்கள். எனவே வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும்- குழியுமான சாலை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே இடையாத்தி ஊராட்சி உள்ளது. இங்குள்ள வேளாம்பட்டி குடியிருப்பு பகுதியில், குறவன் கொல்லை மற்றும் காளி தெருவில் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய விவசாய கூலி தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் வசித்து வருகின்றனர்.இவர்களது குடும்பங்களில் யாராவது இறந்தால் உடலை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று மக்கள் அடக்கம் செய்கிறார்கள். மக்கள் உடலை எடுத்து செல்லும் சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சிஅளிக்கிறது. இதனால் சாலை வழியாக மக்கள் உடலை எடுத்து செல்லும் போது மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

பாலம்

மேலும், சாலையின் குறுக்கே கல்லணை கால்வாயின் பண்ண வயல் வாய்க்கால் உள்ளது. இறந்தவர்கள் உடலை தோளில் சுமந்து செல்லும் மக்கள் வாய்க்காலில் இறங்கி உடலுடன் நடந்து சென்று வாய்க்காலை கடக்கிறாா்கள்.இவ்வாறு செல்லும் போது உடலை சுமந்து கொண்டு வாய்க்காலை கடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.எனவே, குறவன் கொல்லை மற்றும் காளி தெரு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இறந்தவர்கள் உடலை தகனம் செய்ய புதிதாக மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். மேலும் சாலையை சீரமைத்து பண்ண வயல் வாய்க்கால் குறுக்கிடும் இடத்தில் பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.


Next Story