பிரம்ம தீர்த்த குளத்தில் செத்து மிதந்த மீன்கள்


பிரம்ம தீர்த்த குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
x

அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிளி கோபுரம் அருகே பிரம்ம தீர்த்த குளம் உள்ளது.

இந்த குளத்தில் முக்கிய விழா நாட்களில் தீர்த்தவாரி நடைபெறும். இதில் பக்தர்கள் இறங்காத அளவிற்கு இரும்பு கேட் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது.

இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று இக்குளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

இதை கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதை அறிந்த கோவில் பணியாளர்கள் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கோவில் அலுவலர்களிடம் கேட்ட போது, கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் குளத்தில் இருந்த மீன்கள் இறந்திருக்கலாம்.

இருப்பினும் முறையாக அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தால் மட்டுமே என்ன காரணத்திற்காக மீன் இறந்தது என்பது தெரியவரும் என்றனர்.


Next Story