பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் செத்து மிதக்கும் மீன்கள்


பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் செத்து மிதக்கும் மீன்கள்
x

ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் பகுதியில் செல்லும் பாலாற்றில் கடந்த சில மாதங்களாக ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் ஆந்திர எல்லை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் பாலாற்றில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கரையோரம் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் செய்வதற்கும், குடிநீர் ஆதாரத்திற்கு ஏதுவாகவும் அமைந்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் மழை பெய்யும் நேரங்களை பயன்படுத்தி வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் துத்திப்பட்டு, பெரிய வரிகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சில தோல் தொழிற்சாலைகளில் இருந்து இரவு நேரங்களில் கழிவு நீரை நேரடியாக பாலாற்றில் வெளியேற்றுவதால் தொடர்ந்து ஒரு மாத காலமாக பாலாற்றில் கழிவுநீர் கலந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் நுரை பொங்கிய நிலையில் செல்லும் கழிவு நீரில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story