வீரபாண்டி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்


வீரபாண்டி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
x
சேலம்

பனமரத்துப்பட்டி:-

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் கிராம ஊராட்சியில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு திருமணிமுத்தாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் ஆழம் குறைந்ததால் ஏரியின் நீர் பரப்பளவை அதிகரிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ஏரி ஆழப்படுத்தப்பட்டது. இதனால் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் இருந்து வருகிறது. தற்போது ஏரிக்கு மழைநீர் இல்லாத நிலையில், சாக்கடை நீருடன் சாயபட்டறை ரசாயனம் கலந்த நீரும் வருகிறது. ஏரி தண்ணீர் விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து ஏரி கரையோரம் ஒதுங்கின. இறந்த மீன்கள் ஒவ்வொன்றும் ½ கிலோ முதல் 1 கிலோ எடை கொண்டதாகும். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது இன்று (திங்கட்கிழமை) நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியை பார்வையிட்டு, நீரின் தன்மையை பரிசோதனை செயவர். அதில் மீன்கள் இறப்புக்கு கோடை வெயில் காரணமா? ரசாயன கழிவு காரணமா? வேறு வகையிலான விஷம் கலக்கப்பட்டதா? என கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story