குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு


குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
x

குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலையொட்டி பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் பல்வேறு வகையான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மீன்களை பிடிக்க தனியாரிடம் கோவில் நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

குளத்தை சுற்றி ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், வாழை மண்டி, காய்கறி கடைகள் உள்ளன. இந்தநிலையில், நேற்று மதியம் குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குளத்தின் அருகே சென்று பார்த்த போது ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, நகராட்சித் தலைவர் சங்கீதாவெங்கடேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் நகராட்சி பணியாளர்கள் குளத்தில் மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

குளத்தின் தண்ணீர் ஆய்வுக்காக ராணிப்பேட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த உடன் குளத்தில் விஷம் கலந்துள்ளதா? அல்லது கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் விஷமாக மாறியுள்ளதா? என்பது தெரியவரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story