மணிவிழுந்தான் தெற்கு ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
மணிவிழுந்தான் தெற்கு ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
சேலம்
தலைவாசல்,:-
தலைவாசல் அருகே மணிவண்ணன் தெற்கு கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் தற்போது தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் நேற்று திடீரென ஏரியின் பல பகுதியில் சிறிய மீன் முதல் பெரிய மீன்கள் வரை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதற்கான காரணம்தெரியவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி நடேசன், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
ஏரியில் கழிவுநீர் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததா? அல்லது தண்ணீர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் செத்ததா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story