குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரியில் இறந்த ஆடுகள் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது


குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரியில் இறந்த ஆடுகள் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது
x
தினத்தந்தி 28 Dec 2022 7:12 PM IST (Updated: 28 Dec 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரியில் இறந்த ஆடுகள் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

திருவண்ணாமலை

வந்தவாசி

குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஏரியில் இறந்த ஆடுகள் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குடிநியோகம் குடிநீர் விநியோகம் செய்யும் ஏரியில் இறந்த ஆடுகளை மர்ம நபர்கள் வீசி சென்றதால் ஏரியின் தண்ணீர் மாசுபடுவதுடன் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் பாதிரி கிராமம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாதிரி ஏரி உள்ளது

இந்த ஏரியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் சுமார் 150 முதல் 200 ஏக்கர் வரை தண்ணீர் பாசனம் கொண்ட ஏரியாக உள்ளது. இந்த நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்j நிலையில் ஏரிக்கரையில் பல ஆண்டுகளாக இறைச்சி கழிவுகள் மாட்டு சாணம், உள்ளிட்டவை கொட்டப்படு;வதால் ஏரியின் தண்ணீர் மாசுபடுகிறது.

இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இறந்து போன செம்மறி ஆடுகளை மர்ம நபர்கள் ஏரியில் வீசி சென்றுள்ளனர். எனவே இனியாவது பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியின் தண்ணீரை மாசுபடாத அளவிற்கு பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story