டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் இறந்து கிடந்த பூச்சிகள்
வாணியம்பாடி அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூச்சிகள் இறந்து கிடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் நேற்று குடிமகன் ஒருவர் மதுபான பாட்டில்களை வாங்கி உள்ளார். அவர் வாங்கிய மது பாட்டிலில் பூச்சிகள் இறந்த நிலையில் பூச்சிகள், புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் இதுகுறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லையென கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
அரசு டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பூச்சிகள் இறந்தது குடிமகன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story