கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் -கலெக்டர் விஷ்ணு தகவல்


கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் -கலெக்டர் விஷ்ணு தகவல்
x

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2022-23-ம் கல்வியாண்டிற்கு சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம் நீட்டிப்பு

தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெற வருகிற 15-ந் தேதி வரைக்கும், பிளஸ்-1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற வருகிற 30-ந் தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கீழ்தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story