காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
பொருத்துநர் தொழிற்பயிற்சி பிரிவில் சேர காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-ம் ஆண்டிற்கான கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெற்றது. தற்போது, இங்கு மாணவர்கள் சேர்க்கை வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மட்டும் தற்போது காலியாகவுள்ள 10 இடங்களுக்கு பொருத்துநர் தொழிற்பிரிவில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story