காது கேளாதோர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்
திருப்பகத்தூரில் காது கேளாதோர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு செயற்குழுக்கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். ஜெரால்ட் வரவேற்றார், ஜெயவேல், பாபு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். முடிவில் பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் அரசு, தனியார் வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகையை 3000 ரூபாயாக உயர்த்துவது, ஆவின் பாலகம் அமைத்து தருவது, வாரிசு அடிப்படையில் மாற்றுதிறனாளிக்கு வேலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறித்தி வருகிற ஜூலை மாதம் 1-ந் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story