மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முககவசம் அணியாதவர்களுக்கு டீன் அறிவுரை


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முககவசம் அணியாதவர்களுக்கு டீன் அறிவுரை
x

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முககவசம் அணியாதவர்களுக்கு டீன் அறிவுரை வழங்கினார்.

மதுரை


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுபோல், காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்கிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த அறிவிப்பை பின்பற்றுவதற்கான முன்எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக அரசு ஆஸ்பத்திரியின் பிரதான நுழைவு வாசலில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள், ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்களை முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். முககவசம் அணியாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் தலைமையில் டாக்டர்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு முககவசங்கள் வழங்கி அறிவுரை வழங்கினார். இதனால், ஆஸ்பத்திரிக்கு வந்த அனைவரும் முககவசம் அணிந்திருந்ததை காணமுடிந்தது. இதுபோல், முககவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.


Next Story