உத்தனப்பள்ளி அருகேதண்ணீர் தொட்டியில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி


உத்தனப்பள்ளி அருகேதண்ணீர் தொட்டியில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 10 July 2023 1:00 AM IST (Updated: 10 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவன் பலியானான்.

பள்ளி மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் திலிப் சிங். இவருடைய மகன் வருண்சிங் (வயது 12). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வருண்சிங் உத்தனப்பள்ளி அருகே கோவிந்தபுரம் என்னும் இடத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் குளித்து கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் தண்ணீரில் மூழ்கினான்.

விசாரணை

இதையடுத்து சிறிது நேரத்தில் வருண் சிங் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மற்றும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story