பாகலூர் அருகேடிராக்டர் மோதி வடமாநில தொழிலாளி சாவு
ஓசூர்
பாகலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
அசாம் மாநிலம் உருள்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜய்பாரோ (வயது 34). இவர் ஓசூர் அருகே உளிவீரனபள்ளியில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவரும், அதே ஊரை சேர்ந்த பிரதாப் பரோடோ (35) என்பவரும் மோட்டார்சைக்கிளில் உஸ்தனப்பள்ளி அருகில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பிஜய் பரோடோ சம்பவ இடத்தில் பலியானார். பிரதாப் பரோடோ படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணை
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் விரைந்து சென்று பிஜய் பாரோயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.