தேன்கனிக்கோட்டையில்ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகன் நரசிம்மா (வயது 18). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாரச்சந்திரம் ஏரியில் குளிக்க சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் நரசிம்மா கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை மாரச்சந்திரம் ஏரியில் நரசிம்மாவின் உடல் மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததம் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது நரசிம்மா ஏரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story