சூளகிரி அருகேலாரி மீது கன்டெய்னர் மோதி டிரைவர் சாவுகிளீனர் படுகாயம்


சூளகிரி அருகேலாரி மீது கன்டெய்னர் மோதி டிரைவர் சாவுகிளீனர் படுகாயம்
x
கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் இறந்தார். கிளீனர் படுகாயம் அடைந்தார்.

லாரி மீது கன்டெய்னர் மோதியது

உடுமலைப்பேட்டையில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு தீவனம் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் வந்தது. இந்த லாரியை டிரைவர் கோபால் என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக மணி என்பவர் உடன் வந்தார்.

இந்த நிலையில், சூளகிரி அருகே அலகுபாவி என்ற இடத்தில் கன்டெய்னர் லாரி வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் டிரைவரும், கிளீனரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

டிரைவர் சாவு

இந்த விபத்து காரணமாக ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் கோபால் பரிதாபமாக இறந்தார். கிளீனருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story