ஊத்தங்கரை அருகேரெயில் மோதி பெண் சாவு


ஊத்தங்கரை அருகேரெயில் மோதி பெண் சாவு
x
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேலம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதியதில் அந்த பெண்ணின் உடல் சிதறி கிடந்தது. ஆனால் அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story