சூளகிரி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


சூளகிரி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x
கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகேயுள்ள நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது70). இவர், நேற்று இரவு சப்படி பகுதியில், சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள், கன்னியப்பன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மோட்டார் சைக்கிளில் வந்தவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story