ஊத்தங்கரையில் தனியார் பள்ளி பஸ் மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை
ஊத்தங்கரை பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி பஸ் நேற்று சென்றது. பஸ் நிலைய பணிமனை எதிரே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் ஓரம் உள்ள மின் கம்பம் மற்றும் அருகில் உள்ள வீட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காமராஜர் நகரை சேர்ந்த சதாம் உசேன் (வயது 33) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பஸ்சில் சென்ற பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story