கார் மோதி 2 பேர் பலி


கார் மோதி 2 பேர் பலி
x

கார் மோதி 2 பேர் பலியாகினர்.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த கண்ணங்குடி அருகே உள்ளது கொசவகோட்டை கிராமம்.அந்த கிராமத்தை சேர்ந்த பசுபதி (வயது 22). அதே கிராமத்தை சேர்ந்த முத்து (19), புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் (24) ஆகிய 3 பேரும் நேற்று காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். திருச்சி-ராமேசுவரம் சாலையில் சடையன்காடு பஸ் நிறுத்தம் அருகே வரும்போது எதிரே வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்திலேயே மகாலிங்கம் மற்றும் பசுபதி ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். படுகாயத்துடன் முத்துவை சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவிர சிகிச்சைக்காக அவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story