லாரி மோதி என்ஜினீயர் பலி


லாரி மோதி என்ஜினீயர் பலி
x

லாரி மோதி என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கே.ஆத்தங்குடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் பாரத் (வயது23). மரைன் என்ஜினீயரான இவர் கொச்சியில் வேலை பார்த்து வந்தார். நேற்று திருப்பத்தூரில் இருந்து கீழச்சிவல்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை ரோட்டில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாரத் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story