சூளகிரி அருகே லாரி மோதி வாலிபர் சாவு


சூளகிரி அருகே  லாரி மோதி வாலிபர் சாவு
x

சூளகிரி அருகே லாரி மோதி வாலிபர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தேன்கனிக்கோட்டை அருகே பஜ்ஜேபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த மனோஜ் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மனோஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கூட்டரில் சென்ற நபர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story