பாப்பாரப்பட்டி அருகே கார் மோதி கட்டிட மேஸ்திரி சாவு
பாப்பாரப்பட்டி அருகே கார் மோதி கட்டிட மேஸ்திரி இறந்தார்.
தர்மபுரி
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (வயது 37). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாலை கட்டிட வேலை முடித்து மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரத்து பள்ளம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் ெமாபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story