மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x

மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

மதுரை

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செமினிபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 52). தொழிலாளியான இவர் மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குட்லாடம்பட்டி மேம்பாலம் அருகில் டீ வாங்க மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கெங்கு வார்பட்டியை சேர்ந்து அம்பரீஷ் (20), அய்யன்கோட்டை சுதர்சன் (20) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வாடிப் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Related Tags :
Next Story