வாலிபர் மர்மச்சாவு
மேலூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
மதுரை
மேலூர்,
மேலூர் அருகே மேலவளவு போலீஸ் சரகத்தில் உள்ள கேசம்பட்டியை சேர்ந்த சின்னழகு என்பவரின் மகன் கனகராஜ் (வயது33). இவர் கேசம்பட்டி ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் ஆவார். இவரது தோப்பில் உள்ள கிணற்றில் குளிக்கு செல்வதாக மனைவி பார்வதியிடம் கூறி சென்றுள்ளார். இந்தநிலையில் கனகராஜ் கிணற்று தண்ணீரில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து மேலவளவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தலையில் காயத்துடனும், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்று தண்ணீரில் கிடந்த கனகராஜின் உடலை போலீசார் மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story