டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி


டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
x

போச்சம்பள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார்.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 47). விவசாயியான இவர் சொந்தமாக டிராக்டரை வைத்து விவசாய பணிகளுக்காக நிலத்தை உழும் வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று திப்பனூர் பகுதி அருகே அவர் டிராக்டர் ஓட்டி சென்றார். அப்போது திடீரென டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிராக்டர் அடியில் சிக்கி பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story