டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சாவு


டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சாவு
x

தொப்பூர் அருகே 10 அடி ஆழ பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி இறந்தார்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே 10 ஆழ பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி இறந்தார்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மேல்ஈசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 50). விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் நேற்று சாமிசெட்டிப்பட்டி பகுதியில் டிராக்டரை பழுது பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு ஓட்டி வந்தார்.

ஜருகு ஏரிக்கரையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஏரிக்கரையில் இருந்து சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ரவி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story