லாரி மோதி தொழிலாளி சாவு


லாரி மோதி தொழிலாளி சாவு
x

மத்திகிரி அருகே லாரி மோதி தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

மத்திகிரி அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் அச்செட்டிப்பள்ளி தண்டு மாரியம்மன் கோவில் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நாகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story