கல்லூரி மாணவியுடன் விஷம் குடித்த காதலனும் சாவு


கல்லூரி மாணவியுடன் விஷம் குடித்த காதலனும் சாவு
x

பாலக்கோடு அருகே வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்த மாணவியின் காதலனும் பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்த மாணவியின் காதலனும் பரிதாபமாக இறந்தார்.

காதல் ஜோடி

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் சினேகா (வயது 19). இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். குளிக்காடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் தமிழரசு (18). இவர் தர்மபுரியில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பாலக்கோடு அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டது. பின்னர் அவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தற்கொலை செய்து கொள்வதாக செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தனர்.

காதலனும் சாவு

இதையடுத்து உறவினர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாணவி சினேகா பரிதாபமாக இறந்தார். இதனால் தமிழரசு மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை தமிழரசும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story