தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்தவர் பலி
தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்தவர் பலியானார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூசேரி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் காந்தி (வயது70). இவர் ராமநாதபுரம் அண்ணாநகரில் உள்ள அவரின் தங்கை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீட்டினை பெயிண்ட் அடிக்கும் வேலை நடந்துள்ளது.
அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த தின்னர் திரவத்தை தண்ணீர் என நினைத்து காந்தி குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் மகன் சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story