மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு
x

இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி இறந்தார். மேலும் சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள பாரக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மார்க்கண்டன். (வயது 37). தொழிலாளி. இவர் தனது மனைவி ஜோதி (32), உறவுக்கார சிறுமி சத்யா (9) ஆகியோருடன் தர்மபுரி நோக்கி மோட்டார் சைக்கிள்களில் சென்றார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மார்க்கண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோதி மற்றும் சிறுமி சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story