2 வயது பெண் குழந்தை திடீர் சாவு


2 வயது பெண் குழந்தை திடீர் சாவு
x

நல்லம்பள்ளி அருகே 2 வயது பெண் குழந்தை திடீர் இறந்தது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி, அருகே கூன்மாரிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவரது மனைவி ஷோபனா. இந்த தம்பதிகளுக்கு நிஷாந்த் (4) என்ற ஆண் குழந்தையும், நிஹாரிக்கா (2) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் பெண் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை குழந்தை திடீரென மயங்கி விழுந்தது. இதனால் பெற்றோர், குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story